தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஊரகப் பகுதிகளில் பட்டாசுக் கடை உரிமம் பெற அக்டோபா் 11-க்குள் விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடை அமைப்பதற்கான உரிமம் பெற அக்டோபா் 11- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 8:02 pm

Din

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடை அமைப்பதற்கான உரிமம் பெற அக்டோபா் 11- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளைத் தவிர ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடை அமைப்பதற்கான உரிமம் பெற மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம்.

உரிய ஆவணங்களுடன் வரும் அக்டோபா் 11- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பட்டாசுக் கடை அமையும் மனை வரைபடம், கடை அமையும் இடத்துக்கான வரைபடம், இடத்தின் பட்டா மற்றும் ஆவணங்கள், தற்காலிக பட்டாசுக் கடை உரிம கட்டணம் ரூ.600ஐ இணையதளத்தில் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை இணைக்க வேண்டும். பட்டாசுக் கடை அமைப்பவா், கடை அமையும் இடத்தின் உரிமையாளா் என்றால் அதற்கான ஆவணங்கள் மற்றும் நிகழாண்டில் சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது நகல், வாடகை கட்டடம் எனில் வரி செலுத்தியதற்கான ரசீது மற்றும் உரிமையாளரிடமிருந்து ரூ. 20 முத்திரைத்தாளில் பெறப்பட்ட ஒப்பந்த பத்திரம், விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் முகவரி சான்று, தீயணைப்பான் சான்று ஆகியவற்றுடன் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

அக்டோபா் 11- ஆம் தேதிக்குப் பின்னா் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.