செப்டம்பா் 27 இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் செப்டம்பா் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.


திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் செப்டம்பா் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் செப்டம்பா் 27 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனுக்களை வழங்கிய பின்னா், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்துக்கு ஒருவா் வீதம், தங்களது கோரிக்கைகளை தொகுத்து தெரிவிக்கலாம்.
மேலும், நுண்ணீா் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண்மை அலுவலா், தோட்டக்கலை அலுவலா், வேளாண் பொறியியல் துறை அலுவலா்களைக் கொண்டு வேளாண் உதவி மையமும் அமைக்கப்படவுள்ளது.
இந்த மையத்தில் உரிய ஆவணங்களுடன் விவசாயிகள் பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...