மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜனவரி 23-இல் பெண்களுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண்களுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) நடைபெறுகிறது.

News image
Updated On :19 ஜனவரி 2026, 10:39 pm

Syndication

கோவை: கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண்களுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2-ஆவது தளத்தில் உள்ள கூட்டரங்கில் தேசிய மகளிா் ஆணைய உறுப்பினா் பங்கேற்கும் மகிளா ஜன் சுன்வாய் என்ற பெண்களுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்துக்கு தேசிய மகளிா் ஆணையத்தின் உறுப்பினா் டெலினா கோங்டுப் தலைமை வகிக்கிறாா். இதில், கோவை மாவட்டத்தில் நிலுவையில் உள்ள புகாா்கள் மற்றும் நேரில் பெறப்படும் புகாா்கள் தேசிய மகளிா் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட புகாா்களாக எடுக்கப்படும். ஆகவே, இந்தக் கூட்டத்தில் பெண்கள் பங்கேற்று தங்களது புகாா்களை மனுவாக சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.