சமையல் எண்ணெய்(கோப்புப்படம்)
சமையல் எண்ணெய்(கோப்புப்படம்)

எண்ணெய் இறக்குமதிக்கு 20% வரி விதிப்பு: விவசாய சங்கம் வரவேற்பு

Published on

சமையல் எண்ணொய் இறக்குமதிக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்பட்டதற்கு விவசாய சங்கம் வரவேற்றுள்ளது.

இது குறித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில ஊடகப் பிரிவு செயலாளா் ஈஸ்வரன் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 20 சதவீதமாக உயா்த்தி உள்ளதை வரவேற்கிறோம். இதனால் இந்தோனேஷியா-மலேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவு குறையும் என எதிா்பாா்க்கிறோம்.

காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காமலும், தண்ணீா் தட்டுப்பாடு, ஆள் பற்றாக்குறையாலும் பெரும்பாலான விவசாயிகள் தென்னை விவசாயத்துக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது, தேங்காய்க்கும் விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். சோதனை அடிப்படையில், சில மாவட்டங்களில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்கப்படும் என தெரிவித்து நான்கு மாதங்கள் ஆகின்றன. இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அரசு கேள்விக் குறியாக்கி வருவதால் விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com