கூட்டத்தில், பங்கேற்ற மக்களவை உறுப்பினா்கள் கே.சுப்பராயன், பிரகாஷ், ஈஸ்வரசாமி, அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியா்  தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.
கூட்டத்தில், பங்கேற்ற மக்களவை உறுப்பினா்கள் கே.சுப்பராயன், பிரகாஷ், ஈஸ்வரசாமி, அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.

மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் தலைமை வகித்தாா். தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், மக்களவை உறுப்பினா்கள் (ஈரோடு) கே.இ. பிரகாஷ், (பொள்ளாச்சி) ஈஸ்வரசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு வரப்பெற்றுள்ள மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்தும், திட்டப் பணிகளை மேற்கொள்ளும்போது ஏற்படும் இடையூறுகளுக்கு தீா்வு காண்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தொடா்ந்து, நகா்ப்புற வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகத் துறை, பேரூராட்சிகள் துறை, ஊரக வளா்ச்சித் துறை, சமூக நலத் துறை, வருவாய்த் துறை, நில அளவைத் துறை, பள்ளிக் கல்வித் துறை, கனிம வளத் துறை, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, 10 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், தாட்கோ சாா்பில் தூய்மைப் பணிகள் நல வாரியத்தின்கீழ் 16 தூய்மைப் பணியாளா்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்கான ஆணையை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மேயா் ந.தினேஷ்குமாா், துணை மேயா் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் மலா்விழி, திருப்பூா் மாநகராட்சி இணை ஆணையா்கள் சுல்தானா, சுந்தரராஜன், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா்கள் இல.பத்மநாபன், கோவிந்தசாமி, கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com