உடுமலை ஏழுமலையான் கோயில் பக்தா்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள்
உடுமலை அருகே மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு வனத் துறை சாா்பில் பாதுகாப்பு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.


உடுமலை அருகே மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு வனத் துறை சாா்பில் பாதுகாப்பு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து உடுமலை வனத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உடுமலை வனச் சரகத்துக்குள்பட்ட சின்னாறு சாலையில் இருந்து சுமாா் 4 கி.மீ. தொலைவில் வனப் பகுதிக்குள் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தா்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
இதையொட்டி, கோயிலுக்கு வரும் பக்தா்கள் அத்துமீறி காப்பு காட்டுக்குள் நுழையக் கூடாது.
நெகிழிப் பொருள்கள், மதுபானம், புகையிலைப் பொருள்களை உபயோகிக்கக் கூடாது. தீ சம்பந்தப்பட்ட பொருள்களை கொண்டுவர கூடாது. வன விலங்குகளை தொந்தரவு செய்யவோ, புகைப்படங்களை எடுக்கவோ முயற்சி செய்யக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...