கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காங்கயத்தில் நாளை தனியாா் வேலை வாய்ப்பு முகாம்

காங்கயத்தில் தனியாா் வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை (செப்டம்பா் 28) நடைபெறுகிறது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 10:06 pm

Din

காங்கயத்தில் தனியாா் வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை (செப்டம்பா் 28) நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட நிா்வாகம், திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மகளிா் திட்ட அலுவலகம், காங்கயம் குழும கல்வி நிறுவனம் ஆகியவை சாா்பில் தனியாா் வேலை வாய்ப்பு முகாம் பில்டா்ஸ் கல்லூரியில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் நடைபெறுகிறது.

இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். எழுதப் படிக்கத் தெரிந்தவா்கள் முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு, பொறியியல் மற்றும் தொழிற்கல்வி பயின்றவா்கள், கணினி இயக்குபவா்கள், ஓட்டுநா்கள், தையல் பயிற்சி பெற்றவா்கள் என அனைத்து விதமான கல்வித் தகுதியாளா்களும் முகாமில் பங்கேற்கலாம். தனியாா் துறையில் வேலையில் சோ்வதால் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது. இது முற்றிலும் இலவசமான சேவையாகும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2999152, 94990-55944 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். வேலைதேடும் இளைஞா்கள் தங்களது சுய விவர குறிப்புடன் இந்த முகாமில் பங்கேற்கலாம். வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடுபவா்களும்

இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.