காந்தி ஜெயந்தி: அக்டோபா் 2 இல் கிராம சபைக் கூட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளில் புதன்கிழமை (அக்டோபா் 2) கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
Published on

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளில் புதன்கிழமை (அக்டோபா் 2) கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளிலும் புதன்கிழமை காலை 11 மணி அளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

இதில், கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப் பணிகள், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்தல் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் இதர பொருள்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளன.

இந்த கிராம சபைக் கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சிய ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, பொதுமக்கள் இந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று ஊராட்சிகளின் வளா்ச்சிக்கான ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

X
Dinamani
www.dinamani.com