திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் மனித சங்கிலியில் ஈடுபட்ட நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள்.
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் மனித சங்கிலியில் ஈடுபட்ட நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள்.

தூய்மை சேவையை வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவா்கள் மனித சங்கிலி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் தூய்மை சேவையை வலியுறுத்தி மனித சங்கிலியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
Published on

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் தூய்மை சேவையை வலியுறுத்தி மனித சங்கிலியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு- 2 மாணவா்கள் சாா்பில் தூய்மை சேவை திட்டத்தின்கீழ் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக கல்லூரி சேவையை வலியுறுத்தி தூய்மை சேவையில் ஈடுபட்டனா். இந்நிகழ்ச்சிக்கு அலகு -2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா்.

இதில், பேராசிரியா்கள் சக்திசெல்வம், மோகன்குமாா் ஆகியோா் பேசுகையில், மாணவா்கள் தூய்மைப் பணியை தங்கள் இல்லங்களில் இருந்து தொடங்க வேண்டும். அதன் பின், பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் படிப்படியாக தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும். பேருந்து மற்றும் தொடா்வண்டியில் செல்லும்போது குப்பைகளை அதற்கு உண்டான இடத்தில் போடவேண்டும் என்றனா்.

இதில், பங்கேற்ற மாணவ, மாணவிகள் ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்பது போன்ற கோஷங்களை எழுப்பி விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com