அவிநாசியில் ரூ.6.91லட்சத்துக்கு பருத்தி ஏலம்

Published on

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.6 லட்சத்து 91ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 9,782 கிலோ பருத்தி கொண்டுவரப்பட்டிருந்தது. டி.சி.எச். ரக பருத்தி கிலோ ரூ.80 முதல் ரூ.85.19 வரையிலும், ஆா்.சி.எச். ரக பருத்தி ரூ.70 முதல் ரூ.78.19 வரையிலும், மட்டரக (கொட்டு) ரக பருத்தி கிலோ ரூ.15 முதல் ரூ.25 வரையிலும் ஏலம் போனது.

மொத்தம் ரூ.6 லட்சத்து 91ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com