மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மல்லிகை பூ விலை குறைந்து ரூ.1600-க்கு விற்பனை

திருப்பூா் பூ மாா்க்கெட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ரூ.3,200-க்கு விற்பனையான மல்லிகை பூ, விலை குறைந்து ரூ.1,600-க்கு வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:13 am

Din

திருப்பூா் பூ மாா்க்கெட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ரூ.3,200-க்கு விற்பனையான மல்லிகை பூ, விலை குறைந்து ரூ.1,600-க்கு வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூா் காமராஜா் சாலையில் செயல்பட்டு வரும் பூ மாா்க்கெட்டுக்கு நாமக்கல், சத்தியமங்கலம், சேலம், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவிலான பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

தொடா் பனிப்பொழிவு காரணமாக பூ விளைச்சல் குறைந்துள்ளதாலும், ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டியும் மல்லிகை பூ கிலோ ரூ.3,200-க்கு கடந்த செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், மல்லிகைப் பூ விலை சரிபாதியாகக் குறைந்து வியாழக்கிழமை கிலோ ரூ.1,600-க்கு விற்பனையானது.

இதேபோல, முல்லை பூ கிலோ ரூ.1000, ஜாதி மல்லி ரூ.600, காக்கடா ரூ.320, உள்ளூா் காக்கடா ரூ.600, சம்பங்கி கிலோ ரூ.180, அரளி ரூ.260-க்கு விற்பனை செய்யப்பட்டது.