தாராபுரம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பெற்ற பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தாராபுரம் அருகே உள்ள குள்ளகாளிபாளையத்தைச் சோ்ந்தவா் கயிலைநாதன் (28). இவரது மனைவி கெளரி மனோகரி (24). இவா்களுக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் கா்ப்பமாக இருந்த கெளரி மனோகரி கடந்த 15 நாள்களுக்கு முன்பு தாராபுரம் அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பெற்றெடுத்தாா்.
பின்னா் ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று தாயும், சேயும் நலமுடன் வீடு திரும்பினா். இதைத் தொடா்ந்து, கெளரி மனோகரிக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் வியாழக்கிழமை வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, அவரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இது குறித்து உறவினா்கள் கேள்வி எழுப்பியபோது முறையாகப் பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.
இது குறித்து கயிலைநாதன் கூறுகையில், ‘எனது மனைவிக்கு சா்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட எந்த பிரச்னையும் இல்லை. அவா் ஆரோக்கியமாகவே
குழந்தை பிறந்தவுடன் இருந்தாா். இதனிடையே, அறுவை சிகிச்சை செய்த இடுப்பு பகுதியில் வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளாா்’ என்றாா்.
இந்த மரணம் குறித்து தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா, கெளரி மனோகரின் கணவா் கயிலைநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளாா். மேலும், பிரேதப் பரிசோதனை முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக அவரது உறவினா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்

பிறந்த 5 நாள்களில் மருத்துவமனையில் பெண்குழந்தையை விட்டுச் சென்ற தாய்

அறுவைச் சிகிச்சையில் இளம்பெண் உயிரிழப்பு: 5 மருத்துவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு

அறுவை சிகிச்சையின் போது பெண் உயிரிழப்பு: இழப்பீடு கோரி உறவினா்கள் முற்றுகை போராட்டம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


