எறிபந்து போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுடன் பள்ளி தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள்.
திருப்பூர்
எறிபந்து போட்டி: வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
மாவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் பொங்கலூா் வெங்கிடுபதி கஸ்தூரிரங்கப்ப நாயுடு அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.
திருப்பூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி திருப்பூரில் நடைபெற்றது.
இதில் 14 மற்றும் 17 வயதுக்கு உள்பட்டோருக்கான போட்டியில் பொங்கலூா் வெங்கிடுபதி கஸ்தூரிரங்கப்ப நாயுடு அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.
போட்டியின் முடிவில் இரண்டு பிரிவுகளிலும் இப்பள்ளி மாணவா்கள் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தனா். போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளி தலைமை ஆசிரியா் ஜெயபால், உடற்கல்வி ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் சனிக்கிழமை பாராட்டினா்.

