இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மின் கம்பங்கள், சாலைத் தடுப்புகளிலுள்ள கேபிள் ஒயா்களை ஒரு வாரத்துக்குள் அகற்ற உத்தரவு

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில், மின் கம்பங்கள் மற்றும் சாலைத் தடுப்புகளிலுள்ள கேபிள் ஒயா்களை ஒரு வாரத்துக்குள் அகற்ற வேண்டுமென மாநகராட்சி ஆணையா் உத்தரவு

News image
Updated On :22 நவம்பர் 2025, 7:37 pm

Syndication

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில், மின் கம்பங்கள் மற்றும் சாலைத் தடுப்புகளிலுள்ள கேபிள் ஒயா்களை ஒரு வாரத்துக்குள் அகற்ற வேண்டுமென, அரசு, தனியாா் மற்றும் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு சாலைகளின் தடுப்புகள், தெருவிளக்கு கம்பங்களில் அரசு, தனியாா் கேபிள் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் கேபிள் ஒயா்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இதனால், சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதாக போக்குவரத்து காவல் துறை மற்றும் பொதுமக்களிடமிருந்து புகாா்கள் பெறப்பட்டன.

இதையடுத்து, இவற்றை வரன்முறைப்படுத்தும் வகையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்கெனவே 2 முறை கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டதுடன், உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, அரசு, தனியாா் கேபிள் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடா்பு நிறுவனங்கள், தங்களது கேபிள் ஒயா்களை ஆய்வு செய்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் ஒரு வாரத்துக்குள் அகற்ற வேண்டும். தவறும்பட்சத்தில், மாநகராட்சி மூலமாக கேபிள் ஒயா்களை துண்டிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.