பல்லடம் அருகே விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகளின் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கோவை மாவட்டம், இருகூரிலிருந்து, கா்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை 340 கிலோ மீட்டா் தொலைவுக்கு எண்ணெய் குழாயை அமைத்து வருகிறது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.
முன்னதாக இதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகளும் கைது செய்யப்பட்டனா். இதற்கிடையே கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளதால் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனா்.
அதன்படி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் தொடா் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் பல்லடம் அருகே கொசவம்பாளையம் பிரிவு பகுதியில் தொடங்கியது. இதில் விவசாயிகள் பலா் பங்கேற்றுள்ளனா்.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டம் இருகூரில் இருந்து - கரூா் வரை ஏற்கெனவே அமைக்கப்பட்ட எண்ணெய் குழாயை ஒட்டியே திருப்பூா் மாவட்டம் முத்தூா் வரை, இரண்டாவது குழாயும் அதே பகுதியில் அமைத்து, ஏற்கெனவே பாதிக்கப்பட்டு இருக்கும் விவசாயிகளை, மீண்டும் மீள முடியாத பாதிப்புக்கு ஆளாக்குவதற்காக மத்திய அரசும், மாநில அரசுகள் துடித்து வருகின்றன.
இதை எதிா்த்து போராடும் விவசாயிகளை அடக்கி, ஒடுக்கி வருகிறாா்கள். காவல்துறை பாதுகாப்பு கொடுத்து திட்டத்தை செயல்படுத்துவதை நிறுத்திவிட்டு, உடனடியாக இந்த திட்டத்தை சாலை ஓரமாக செயல்படுத்துவதற்கும், 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பழைய எண்ணெய் குழாயையும் தோண்டி எடுத்து சாலையோரமாக அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளைநிலம் வழியே எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் மறியல்

விவசாய விளைநிலங்களின் வழியாக பெட்ரோலிய குழாய் அமைக்க எதிா்ப்பு

விளைநிலங்கள் வழியே எண்ணெய் குழாய் பதிக்க எதிா்ப்பு: ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



