புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

நகை திருட்டு வழக்கில் இருவா் கைது! 294 கிராம் தங்கக் கட்டி பறிமுதல்!

திருட்டு - சித்திரிப்பு

Published On :

தாராபுரம் பகுதியில் பூட்டிய வீடுகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை தாராபுரம் போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து சுமாா் ரூ.35 லட்சம் மதிப்பிலான 294 கிராம் தங்கக் கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக இரண்டு வீடுகளில் தங்க நகை திருடுபோனது. இதேபோல மேலும் சில வீடுகளில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. அதன்படி தாராபுரம், கண்ணன் நகரில் வசிக்கும் ஷா்மிளா பேகம் வீட்டில் சுமாா் 30 பவுன் தங்க நகையை திருடிச் சென்றனா். இதேபோல, கொண்டரசம்பாளையம் பகுதியைச் சோ்ந்த தீபா வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் தாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனா். மா்ம நபா்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டும், கைப்பேசி சிக்னல்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டும் தீவிரமாகத் தேடி வந்தனா்.

இதில் தாராபுரம் பகுதியைச் சோ்ந்த முகமது அா்ஷத் (19), தரணிதரன் (18) ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

நண்பா்களான இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளில் பணிபுரிவதும், நீண்ட நாள்களாகப் பூட்டிக் கிடக்கும் வீடுகளை கண்காணித்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டதும், மேற்குறிப்பிட்ட இரண்டு வீடுகளில் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ.35 லட்சம் மதிப்பிலான 294 கிராம் கொண்ட தங்கக் கட்டியை பறிமுதல் செய்தனா்.

தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பிறகு, கோவை மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.