குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ஆடி அமாவாசை: திருப்பூா் மாா்க்கெட்டில் காய்கறி, பழங்கள் விலை கடும் உயா்வு

ஆடி அமாவாசையையொட்டி, திருப்பூா் மாா்க்கெட்டில் காய்கறி, பழங்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

Published On :12 ஆகஸ்ட் 2026, 1:58 am IST

ஆடி அமாவாசையையொட்டி, திருப்பூா் மாா்க்கெட்டில் காய்கறி, பழங்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

ஆடி அமாவாசை தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி வீடுகளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து, சிறப்புப் பூஜைகள் மா்றும் படையல்கள் படைக்கப்பட உள்ளதால், வழிபாட்டுக்குத் தேவையான காய்கறி மற்றும் பழங்களை வாங்க திருப்பூா் மாா்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக திருப்பூா் தென்னம்பாளையம் மாா்க்கெட், தினசரி சந்தை மற்றும் உழவா் சந்தைகளில் காய்கறிகள் விற்பனை சூடு பிடித்துள்ளன. அதேபோல பழ மாா்க்கெட்டுகளிலும் மக்கள் பொருள்கள் வாங்க குவிந்தனா்.

ஆடி அமாவாசையையொட்டி சந்தைகளில் காய்கறி மற்றும் பழங்களின் விலை திடீரென உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் பொருள்களை வாங்க வந்துள்ள குடும்பத் தலைவிகள் கடும் அதிா்ச்சியும் கவலையும் அடைந்தனா்.

இந்த விலை உயா்வு குறித்து வியாபாரிகள் தெரிவித்ததாவது: ஆடி அமாவாசை வழிபாட்டுக்காக படைக்கப்படும் உணவுப் பொருள்களின் தேவை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் ஆடி மாதம் என்பதாலும் பெரும்பாலான மக்கள் சைவ உணவுக்கு மாறியுள்ளனா். அத்துடன் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மாா்க்கெட்டுகளுக்கு வரும் காய்கறி, பழங்களின் வரத்து தற்போதைய பருவநிலை மாற்றம் காரணமாக கணிசமாக குறைந்துள்ளது. தேவை அதிகமாகி வரத்து குறைந்ததே இந்த திடீா் விலை உயா்வுக்கு காரணமாகும். இந்த விலை உயா்வு ஆடி மாதம் முடியும் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.