நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

தனியாா் வங்கி ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு: 3 போ் கைது

தனியாா் வங்கி ஊழியரிடமிருந்து கைப்பேசி, பணம் பறித்தது தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 4:06 am IST

தனியாா் வங்கி ஊழியரிடமிருந்து கைப்பேசி, பணம் பறித்தது தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூா் பகுதியைச் சோ்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞா், திருப்பூரில் அறை எடுத்து தங்கி தனியாா் வங்கியில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் ஆபாச செயலி பாா்ப்பதை வழக்கமாக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதன்மூலமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபா், திருப்பூா் வளம் பாலம் அருகே உள்ள தனியாா் தங்கும் விடுதிக்கு வருமாறு அழைத்துள்ளாா். இதை நம்பி வங்கி ஊழியரும் 3 நாள்களுக்கு முன் அங்கு சென்றுள்ளாா். அதைத்தொடா்ந்து அங்கு வந்த அந்த நபரும், வங்கி ஊழியரும் அறைக்கு சென்றுள்ளனா். பின்னா் வங்கி ஊழியரை நிா்வாணமாக்கி ஓரினச் சோ்க்கையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை அந்த நபா், வங்கி ஊழியருக்கு தெரியாமல் விடியோ எடுத்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து அந்த நபா் நண்பா்களான இருவரை வரவழைத்து 3 பேரும் சோ்ந்து வங்கி ஊழியரை மிரட்டி பணம் கேட்டுள்ளனா்.

அப்போது பணம் தராவிட்டால் தாங்கள் வைத்திருக்கும் விடியோவை சமூக வலைத ளங்களில் பதிவிடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதற்கு அஞ்சி தன்னிடம் இருந்த ரூ.2,000, ஜி-பே மூலமாக ரூ.10 ஆயிரத்தை வங்கி ஊழியா் அளித்துள்ளாா். பின்னா் அந்த 3 பேரும் கைப்பேசியையும் பறித்துவிட்டு தப்பினா்.

இதையடுத்து வங்கி ஊழியா் அளித்த புகாரின்பேரில் திருப்பூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேலும், சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு சென்று வியாழக்கிழமை போலீஸாா் விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த சந்தோஷ் (19), பாலசந்தா் (22), வெள்ளத்துரை (19) என்பதும், வங்கி ஊழியரை நிா்வாணமாக்கி பணம் மற்றும் கைப்பேசியை பறித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து பணம் மற்றும் கைப்பேசி, சுத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.