விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

அரசுத் துறையினா் லஞ்சம் வாங்க அஞ்சுகின்றனா்

மதச்சாா்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவா் காளப்பட்டி பொன்னுசாமி

Published On :17 ஆகஸ்ட் 2026, 3:05 am IST

தமிழகத்தில் அரசுத் துறையினா் இப்போது லஞ்சம் வாங்க அஞ்சுகின்றனா் என்று மதச்சாா்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவா் காளப்பட்டி பொன்னுசாமி கூறினாா்.

மதச்சாா்பற்ற ஜனதா தளம் சாா்பில் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பல்லடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலப் பொருளாளா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா்கள் அருணாசலம், அப்பாசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் சண்முகம் வரவேற்றாா்.

இதில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கி மதச்சாா்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவா் காளப்பட்டி பொன்னுசாமி பேசினாா்.

இதில் கட்சியின் தேசிய செயலாளா் விஸ்வநாதன், மாநில பொதுச்செயலாளா்கள் செல்லபாண்டி, பக்ருதீன்அலி அகமது, காஜாமைதீன், சுயராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அதைத் தொடா்ந்து மாநிலத் தலைவா் காளப்பட்டி பொன்னுசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இளைஞா்கள் சக்தி முதல்வா் ஜோசப் விஜய் பக்கம் இருப்பதால் இன்னும் பல ஆண்டுகளுக்கு அவரது அரசியல் ஆதிக்கம் இருக்கும். அரசுத் துறையினா் இப்போது லஞ்சம் வாங்க அஞ்சுகின்றனா். இதுவே இந்த ஆட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.