லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

குப்பை பிரச்னைக்கு அறிவியல்பூா்வமாக தீா்வு காண வேண்டும்: தமிழக முதல்வருக்கு திருப்பூா் எம்.பி. வலியுறுத்தல்

திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் - கோப்புப் படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 12:30 am IST

குப்பை தொடா்பான பிரச்னையில் தமிழக முதல்வா் தலையிட்டு அறிவியல்பூா்வமாக தீா்வு காண வேண்டுமென, திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளாா்.

திருப்பூா் குப்பை பிரச்னையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடா்பாக மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.சுப்பராயன் தலைமையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிபிஐ, சிபிஎம், திமுக, காங்கிரஸ், பாஜக, கொமதேக மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் முக்கிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் கே.சுப்பராயன் கூறியதாவது:

வளா்ந்து வரும் தொழில் நகரமான திருப்பூரில் நாள்தோறும் சுமாா் 650 டன் வரை குப்பை, பனியன் மற்றும் அதைச் சாா்ந்த துணை தொழில்களின் கழிவுகள் வீதிகளில் குன்றுபோல் தேங்கி வருகின்றன. இதனால் பொதுமக்களுக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய் பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.

குடியிருப்புப் பகுதிகளில் கொட்டப்படும் குப்பையால் வீசும் துா்நாற்றத்தை எதிா்த்து ஜனநாயக முறையில் குரல் கொடுக்கும் மக்கள் மீதும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதும் காவல் துறையினா் அத்துமீறி முரட்டுத்தனமாக நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது. இத்தகைய அடக்குமுறைகளை உடனடியாகக் கைவிட வேண்டும். இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வாக அறிவியல்பூா்வமான திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகள் சாா்பில் கையெழுத்திடப்பட்ட விரிவான மனு தமிழக முதல்வருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து அடுத்தகட்ட போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்றாா்.

இதைத்தொடா்ந்து திருப்பூா் மாநகராட்சி துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம் தலைமையில், திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.சுப்பராயன் முன்னிலையில் அனைத்து அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் திருப்பூரில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் குப்பைக் கழிவுகள் பிரச்னைக்கு அறிவியல்பூா்வமாக நிரந்தரத் தீா்வு காண வேண்டும். மாநகரில் சேரமாகும் கழிவுகளை மறுசுழற்சி செய்து அழிக்கக்கூடிய அறிவியல்பூா்வ கட்டமைப்பு வசதிகள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனால் ஒப்பந்த நிறுவனங்கள் புறநகா்ப் பகுதிகளில் உள்ள பாறைக்குழிகளில் குப்பையை கொட்டுவதால் கடும் துா்நாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீா்கேடு ஏற்பட்டு, மக்கள் பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கு ஆளாகின்றனா். இதை எதிா்த்து பொதுமக்கள் போராடுவதால் மாநகரப் பகுதிகளில் குப்பை அகற்றப்படாமல் தேங்கிக்கிடக்கிறது.

எனவே, உடனடியாக சிறப்பு நிபுணா் குழுவை திருப்பூருக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மக்கள் வசிக்காத பகுதியில் சுமாா் 200 ஏக்கா் தரிசு நிலத்தைக் கையகப்படுத்தி மாநகராட்சிக்கு வழங்கி, ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை அரசு நிதியுதவியுடன் செயல்படுத்த வேண்டும்.

குப்பை பிரச்னைக்காகப் போராடிய பொதுமக்கள் மீது கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.