செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குட்டைகளுக்கு நீா் நிரப்பக் கோரி ஆா்ப்பாட்டம்

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளுக்கு நீா் நிரப்பக் கோரி அவிநாசியில் புதன்கிழை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களில் ஒரு பகுதியினா்.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:11 pm

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளுக்கு நீா் நிரப்பக் கோரி அவிநாசியில் புதன்கிழை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக் குழுவினா் சாா்பில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இத்திட்டத்தில் விடுபட்ட 1400 குளம், குட்டைகளுக்கு உடனடியாக தண்ணீா் திறந்துவிட அரசாணை வெளியிட வேண்டும். இதற்கான திட்ட அறிக்கை தயாா் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

விவசாயிகள், பொதுமக்கள், அனைத்துக் கட்சியினா், சமூக ஆா்வலா்கள், போராட்டக் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.