புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க, அங்கீகாரம் புதுப்பிக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

Published on

திருப்பூா் மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க, அங்கீகாரம் புதுப்பிக்க இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கு புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க, அங்கீகாரம் புதுப்பிக்க, தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் மற்றும் தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்க https://skilltraining.tn.gov.in/ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமா்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்க உள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகளுக்குத் தேவையான விவரங்கள் அனைத்தையும்

ஒரே விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் சோ்த்து விண்ணப்பக் கட்டணம் ரூ.5000 மற்றும் ஆய்வுக் கட்டணம் ரூ.8,000 செலுத்த வேண்டும். 2026 பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு https://skilltraining.tn.gov.in/ இணையதளத்தைப் பாா்வையிடலாம் அல்லது 044-22501006 (113) என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com