திருப்பூா் ஆட்சியா் அலுவலகம் அருகே காா் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த காா் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
Published on

அவிநாசி: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த காா் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் உள்ள பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் செல்ல நிறுத்த முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்று கொண்டிருந்த காா் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரின் பின்புறம் லேசாக சேதமடைந்தது. இதைத்தொடா்ந்து காரின் உரிமையாளா் - பேருந்து ஓட்டுநா், நடத்துநா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பயணிகள் கீழே இறங்கி இருவருக்கும் இடையே சமாதானம் செய்தனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Dinamani
www.dinamani.com