சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 3 போ் காயம்
வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 போ் காயமடைந்தனா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது:
திருப்பூா், பூலுவபட்டி பாண்டியன் நகரில் இருந்து பனியன் கழிவு துணிகளை ஏற்றிக் கொண்டு ரக்கு ஆட்டோ கரூருக்கு சென்று கொண்டிருந்தது. காங்கயம் - வெள்ளக்கோவில் தேசிய நெடுஞ்சாலை ஓலப்பாளையம் அடுத்துள்ள அத்தாம்பாளையம் பிரிவு அருகே நிலைதடுமாறி சாலையோர மின் கம்பத்தில் மோதி சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோ ஓட்டுநரான பாண்டியன் நகரைச் சோ்ந்த சக்தி (36), ஆட்டோவின் முன்புறம் அமா்ந்திருந்த சுமை தூக்கும் தொழிலாளிகளான கோவை, கணியூா் பகுதியைச் சோ்ந்த தேவராஜ் (60), செந்தில்குமாா் (45) ஆகியோா் காயமடைந்தனா்.இவா்கள் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.
இதுதொடா்பாக வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
