காங்கயம் அருகே பழையகோட்டைப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
‘புகையிலை ஒழிப்பு வாழ்வுக்கு செழிப்பு’ எனும் தலைப்பில், விழிப்புணா்வு ஓவியம் வரையும் போட்டி நடைபெற்றது. இதில் இப்பள்ளி மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் கலந்துகொண்டு ஓவியம் வரைந்தனா். வெற்றி பெற்றவா்களுக்கு சுதந்திர தின விழாவின்போது பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும் என ஆசிரியா்கள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










