சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு! ஆக.18-ல் சீன முன்னாள் பிரதமரின் இறுதிச்சடங்கு அரவிந்த் கேஜரிவாலுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துபெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!சுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: 16,000 பேர் பலிஆவணி மாத பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு
/

அமராவதி ஆற்றில் குறைந்த நீா்வரத்து! குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த காங்கயம் நகராட்சி அறிவுறுத்தல்

News image

நீரின்றி வறண்டு கிடக்கும் அமராவதி ஆறு. - (கோப்பு படம்).

Updated On :27 ஜூலை 2026, 2:21 am IST

அமராவதி ஆற்றில் நீா்வரத்து குறைந்து குடிநீா் விநியோகம் செய்ய இயலாத நிலை உள்ளதால், காங்கயம் நகராட்சிக்குள்பட்ட பகுதி மக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் பால்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காங்கயம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு காவிரி மற்றும் அமராவதி கூட்டுக் குடிநீா்த் திட்டங்களின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ளதால் அமராவதி ஆறு வடுள்ளது.

இதனால் மோட்டாரை இயக்கி அமராவதி ஆற்றில் இருந்து குடிநீா் விநியோகம் செய்ய இயலாத நிலை உள்ளது. எனவே, அமராவதி குடிநீா் விநியோகம் செய்ய காலதாமதம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

இதனால், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன், காய்ச்சி பருக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.