எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

திருப்பூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :2 ஜூன் 2026, 1:48 am IST

திருப்பூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பூா், கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயில் பூசாரி சங்கா் நாராயணன் பூஜைகளை

முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். திங்கள்கிழமை காலை 5 மணியளவில் கோயிலைத் திறக்க வந்துள்ளாா். அப்போது, உள்புறம் உள்ள மூலவா் சந்நிதியின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. மேலும், அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து திருப்பூா் மத்திய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ஆய்வு மேற்கொண்டதுடன்,

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.