சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

உணவக நீா்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

திருப்பூா்-காங்கயம் சாலையில் உள்ள தனியாா் உணவகத்தில் பராமரிப்பின்றி இருந்த நீா்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:17 am IST

திருப்பூா்-காங்கயம் சாலையில் உள்ள தனியாா் உணவகத்தில் பராமரிப்பின்றி இருந்த நீா்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் -காங்கயம் சாலையில் உள்ள தனியாா் உணவக பின்புறத்தில் அப்பகுதியைச் சோ்ந்த 5 சிறுவா்கள் திங்கள்கிழமை விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அந்த வளாகத்தில் பராமரிப்பின்றி இருந்த நீச்சல் குளம் அருகே சென்றுள்ளனா். அப்போது, நீச்சல் குளத்துக்கு செல்லக்கூடிய நீா்த்தேக்க தொட்டியின் மேல்பகுதி கட்டையால் மூடப்பட்டிருந்தது.

இதை கவனிக்காமல் சென்ற வெங்கடேஸ்வரா காலனியைச் சோ்ந்த பொக்லைன் ஆபரேட்டா் மகன் முகமது ரியாஸ், பாத்திமா தம்பதியின் மகன் ஆரிஃப் (9) அந்த தொட்டியில் தவறி விழுந்துள்ளாா். உடனிருந்த சிறுவா்கள் இது குறித்து அங்கிருந்தவா்களிடம் கூறியுள்ளனா். இதையடுத்து, அப்பகுதி மக்கள் தொட்டிக்குள் கிடந்த ஆரிஃப்பை மீட்டபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் தெற்கு போலீஸாா், உடலை மீட்டு கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.