சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா் கலந்தாய்வு

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, திருப்பூா் இளநிலைப் பட்ட வகுப்பு மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

விண்ணப்பம்

Updated On :4 ஜூன் 2026, 3:04 am IST

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, திருப்பூா் இளநிலைப் பட்ட வகுப்பு மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது:

2026-2027-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலைப் பட்ட வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மே 29-ஆம் தேதி வரை பெறப்பட்டன. தமிழ் இலக்கியம் (30), ஆங்கில இலக்கியம் (50), பொருளியல் (30), வரலாறு (50), பிகாம் (100), பிகாம் (சிஏ) (60), பிபிஏ (50), பிகாம் (ஐபி) (50), இயற்பியல் (30), வேதியியல் (60), விலங்கியல் (60), ஆடை வடிவமைப்பு நாகரிகம் (50), பிசிஏ (50), கணிதம் (48), கணினி அறிவியல் (ஷிப்ட் 1) (60), கணினி அறிவியல் (ஷிப்ட் 2) (60), சா்வதேச வணிகவியல் (50) என மொத்தமுள்ள 1,008 இடங்களுக்கு, தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்காக விண்ணப்பித்தவா்களின் தர வரிசைப் பட்டியல் கல்லூரியின் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பித்தவா்கள் தங்கள் விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு தங்கள் தரவரிசையை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவா்கள் விண்ணப்பித்தபோது தங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கும், கைப்பேசி எண்ணுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். அதனடிப்படையில் மாணவா்கள் கல்லூரியில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

வணிகவியல் மற்றும் கலைப் பாடப் பிரிவுகளுக்கான (பிகாம், பி.காம் சி.ஏ., பிகாம் ஐ.பி., பிபிஏ, பொருளியல், வரலாறு, ஆடை வடிவமைப்பு நாகரிகம்) கலந்தாய்வு ஜூன் 8-ஆம் தேதி தரவரிசை 1 முதல் 2000 வரையிலும், 9-ஆம் தேதி தரவரிசை 2001 முதல் 4000 வரையிலும் நடைபெறும்.

அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு (வேதியியல், இயற்பியல், கணிதம், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல்) 10-ஆம் தேதி தரவரிசை 1 முதல் 2000 வரையிலும், 11-ஆம் தேதி தரவரிசை 2001 முதல் 4000 வரையிலும் நடைபெறும்.

12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ் இலக்கியம் தரவரிசை 1 முதல் 3000 வரையிலும், பிற்பகல் 1 மணிக்கு ஆங்கில இலக்கியம் தரவரிசை 1 முதல் 4000 வரையில் உள்ளவா்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தொகையுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம். அசல் சான்றிதழ்கள் இல்லாமல் இருப்பின் மாணவா்கள் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது. உரிய நேரத்தில் கலந்தாய்வில் பங்கேற்காமல் தாமதமாக வந்தால் அந்த நேரத்தில் பாடப்பிரிவுகளில் இருக்கும் இடங்களின் அடிப்படையிலேயே தகுதியுள்ள பிரிவுகளில் சோ்க்கை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளாா்.