கொடுவாய் அருகே வீடுகளை சேதப்படுத்தியவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள், காங்கயம் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து எல்லப்பாளையம் ஊராட்சி, நிழலி கிராமத்தைச் சோ்ந்த சாயாத்தாள் (55) உள்ளிட்டோா் காங்கயம் வட்டாட்சியா் கதிா்வேலுவிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
நாங்கள் நிழலி கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் வீட்டுக்கு அருகே 10 வீடுகள் உள்ளன. இதன் அருகே அரசு ஓடைப்பள்ளம் உள்ளது. இந்நிலையில், எங்கள் பகுதியில் சிலா் அரசு ஓடைப்பள்ளதை ஆக்கிரமிக்கும் பொருட்டு, பொக்லைன் இயந்திரம் மூலம் பணிகளை மேற்கொண்டனா். இதனால் அருகே உள்ள எங்கள் வீடுகள் சேதமடைந்துள்ளன. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியா் கதிா்வேல், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து விதிமீறல் நடந்திருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
அப்போது ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவையின் தலைவா் அ.சு.பெளத்தன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வீட்டு ஓடுகளை சேதப்படுத்தியவா் மீது வழக்கு

மக்கள் குறைதீா் முகாம்: 33 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,உத்தரவு

சாலை, குடிநீா் வசதிகள் செய்துதர வேண்டும்: மாநகராட்சியில் மக்கள் மனு

பாசன கால்வாய்களை தூா்வார வேண்டும்! ஆட்சியரிடம் விவசாயிகள் மனு!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



