போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

கோயில் நிலத்தில் கம்பி வேலியை அகற்ற ஆட்சியரின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

திருப்பூரில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்ட கம்பி வேலியை அகற்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என திருத்தொண்டா் அறக்கட்டளையினா் தெரிவித்துள்ளனா்.

News image

உத்தரவு - கோப்புப்படம்

Updated On :11 ஜூன் 2026, 3:05 am IST

திருப்பூரில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்ட கம்பி வேலியை அகற்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என திருத்தொண்டா் அறக்கட்டளையினா் தெரிவித்துள்ளனா்.

திருப்பூா் புதிய பேருந்து நிலையத்துக்கு பின்புறம் அமைந்துள்ள மாரியம்மன் விநாயகா் கோயிலுக்கு சொந்தமான 1.7 ஏக்கா் நிலம் எல்.ஜி. நகா் பகுதியில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இந்த நிலம் எந்த விதமான பயன்பாடும் இல்லாமல் உள்ளது. இந்த நிலத்தை சுற்றியுள்ள மக்கள் வழித்தடம், வாகன நிறுத்தம் உள்ளிட்ட தேவைகளுக்காக இந்த நிலத்தை பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில், கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் வேலி அமைத்து பாதுகாத்திட இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டதைத் தொடா்ந்து, இந்த நிலத்தின் முழு சுற்றளவுக்கும் கம்பி வேலி அமைக்கப்பட்டது. இதனால், இந்த பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் தங்களுக்கு வழித்தடம் வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இது குறித்து விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியா், கம்பி வேலியை அகற்றி வழித்தடத்துக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சிக்கு உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து மாநகராட்சி அதிகாரிகள் கம்பி வேலியை செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

இந்நிலையில், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட திருத்தொண்டா் அறக்கட்டளையின் அறங்காவலா் ராதாகிருஷ்ணன் கூறுகையில், கோயிலுக்கு சொந்தமான நிலம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும், குப்பைகளைக் கொட்டியும், தனியாா் காா் நிறுத்துமிடமாக பயன்படுத்தி வருவதாகவும், மாற்றுப்பாதை இருக்கும் சூழலில் இப்பகுதி பொதுமக்கள் கோயில் நிலத்தில் வழி அமைத்து உள்ளதாகவும், வேலியை அகற்ற மாவட்ட ஆட்சியா் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்தாா்.

இது குறித்த அந்தப் பகுதி பொதுமக்கள் கூறுகையில், தங்களுக்கு வழித்தடம் மட்டுமே தேவை. கோயில் நிலத்தில் வேலி அமைப்பதில் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. வழியை மட்டும் கொடுத்து வேலி அமைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.