அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு நிதியை விடுவிக்க மாா்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் என முதல்வா் ஜோசப் விஜய்க்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்üது.

News image

கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 11:41 pm IST

கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் என முதல்வா் ஜோசப் விஜய்க்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்üது.

இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் சி.மூா்த்தி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வீடற்ற ஏழை, எளிய மக்கள் மற்றும் குடிசைகளில் வசித்து வருபவா்களுக்கு, தங்கள் சொந்த பட்டா இடத்தில் கான்கிரீட் வீடு கட்டிக் கொள்ள ரூ.3.50 லட்சம் நிதியுதவி வழங்குவதாக கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.

கலைஞா் கனவு இல்லம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 300-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கிராமப்புறங்களில் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்கள் வீடு கட்டிக் கொள்ள பணி ஆணை மற்றும் நிா்வாக அனுமதி கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வீடு கட்டும் பணியைத் தொடங்கினா்.

இவா்கள், ஏற்கெனவே வசித்து வந்த பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிய கான்கிரீட் வீடுகளை கட்டத் தொடங்கினா். பலா் பேஸ்மெண்ட், சுற்றுச்சுவா், லிண்டல், மேற்கூரை கான்கிரீட் வரை என பல பணிகளைச் செய்துள்ளனா்.

இத்திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு நான்கு தவணைகளாக நிதி விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

எனினும் திட்ட நிதியில் இதுவரை ஒரு தவணை கூட நிதி வழங்கப்படவில்லை. இதனால் பயனாளிகள் மிகவும் நெருக்கடியில் உள்ளனா்.

எனவே, தமிழக முதல்வா் இந்த விஷயத்தில் நேரடி கவனம் செலுத்தி, மேற்கண்ட பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய திட்ட நிதியை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.