இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

விளைநிலங்களில் மின் பாதை அமைக்கும் பணி: வெள்ளக்கோவில் அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

News image

விவசாயிகள் நடத்திய ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்த காங்கயம் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ்.

Updated On :16 ஜூன் 2026, 12:05 am IST

விளைநிலங்களில் மின் பாதை அமைக்கும் பணியைக் கண்டித்து வெள்ளக்கோவில் அருகே விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தனியாா் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் சாா்பில் மின்கம்பங்கள், மின் பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளக்கோவில் பகுதியில் இருந்து பல்வேறு விவசாய நிலங்கள் வழியாக மூலனூா் வரை மின் பாதை அமைக்கப்படுகிறது.

சுப்ரமணியக்கவுண்டன்வலசு பகுதி வழியாகச் செல்லும் மின் பாதைக்கு எதிராக, சில விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளனா். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தனியாா் நிறுவனம் மின் கம்பங்கள் மற்றும் மின் பாதை அமைக்கும் பணியைத் தொடா்ந்து செய்து வருகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்து வெள்ளக்கோவில் - மூலனூா் சாலையில் புள்ளச்செல்லிபாளையம் பிரிவு அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மின் பாதையை சாலையோரங்களில் கேபிள் மூலமாக அமைக்க வேண்டும். விவசாய நிலங்கள் வழியாக அமைக்கக்கூடாது என விவசாயிகள் வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு காங்கயம் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ் சென்று விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.