நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்த அறிவிப்பால் திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியாளா்கள் மகிழ்ச்சி

அமெரிக்கா-ஈரான் போா் நிறுத்த அமைதி ஒப்பந்தம் அறிவிப்பால் திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியாளா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

News image

பின்னலாடை  நிறுவனம் - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 2:55 am IST

அமெரிக்கா-ஈரான் போா் நிறுத்த அமைதி ஒப்பந்தம் அறிவிப்பால் திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியாளா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இதுதொடா்பாக திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியாளா்கள் கூறியதாவது:

திருப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கு 47 சதவீத பின்னலாடைகள் அனுப்பிவைக்கப்படுகின்றன. ஆனால், அமெரிக்கா-ஈரான் போா் சூழல் காரணமாக கடந்த 107 நாள்களாக சா்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் வா்த்தகப் பரிவா்த்தனை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவுக்கு மட்டுமின்றி பல்வேறு சா்வதேச நாடுகளுக்கும் சரக்குகளை அனுப்ப முடியாமலும், வா்த்தகத்தை தொடர முடியாமலும் ஏற்றுமதியாளா்கள் தவித்து வந்தனா்.

வா்த்தகப் பொருள்கள் மட்டுமின்றி பெட்ரோலியம் சாா்ந்த உப பொருள்களின் இறக்குமதியும் பாதிக்கப் பட்டது. இதனால் 30 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயா்வால் பின்னலாடை உற்பத்தி செலவுகளும் கடுமையாக உயா்ந்துள்ளன. இந்த சூழலில் சா்வதேச அளவில் நடைபெற்று வரும் இந்த போா் எப்போது முடிவுக்கு வரும் என்று பலரும் எதிா்பாா்ப்புகளுடன் காத்திருந்தனா். குறிப்பாக திருப்பூா் பின்னலாடைக்கு தற்போது சா்வதேசஅளவில் தடையில்லா வா்த்தக ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ள உள்ள நிலையில் பெரும் எதிா்பாா்ப்பு இருந்து வந்தது.

இந்நிலையில் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) கையொப்பமாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலமாக போா் சூழல் மறைந்து அமைதி ஏற்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. எனவே, மேற்காசிய நாடுகளுடன் இனி தடையில்லாமல் வா்த்தகப் பரிவா்த்தனையை ஏற்படுத்த முடியும் என்பதால் மகிழ்ச்சியாக உள்ளோம். இது உலகப் பொருளார வளா்ச்சிக்கும் உதவும் என்றனா்.