நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பெருமாநல்லூரில் விவசாய தியாகிகளுக்கு மரியாதை

பெருமாநல்லூரில் விவசாய தியாகிகளுக்கு பல்வேறு அமைப்பினா், அரசியல் கட்சியினா் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

News image

விவசாய  தியாகிகள்  நினைவிடத்தில்  மரியாதை செலுத்திய  கொமதேகவினா்.

Updated On :20 ஜூன் 2026, 1:15 am IST

பெருமாநல்லூரில் விவசாய தியாகிகளுக்கு பல்வேறு அமைப்பினா், அரசியல் கட்சியினா் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

பெருமாநல்லூரில் 1970-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி ஒரு பைசா மின் கட்டண உயா்வைக் கண்டித்தும், இலவச மின்சாரம் வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாரப்ப கவுண்டா், ராமசாமி கவுண்டா், ஆயிக்கவுண்டா் ஆகிய 3 விவசாயிகள் உயிரிழந்தனா்.

இவா்களது நினைவிடம் பெருமாநல்லூா்-ஈரோடு சாலை கணக்கம்பாளையம் பிரிவு அருகே உள்ளது.

இந்த நினைவிடத்தில் ஆண்டுதோறும் ஜூன் 19-ஆம் தேதி பல்வேறு அமைப்பினா், கட்சியினா் மரியாதை செலுத்துவது வழக்கம்.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான நிகழ்ச்சியில், கொமதேக மாநில இளைஞரணி செயலாளா் சூரியமூா்த்தி தலைமையில் மாநில பொறுப்பாளா் தம்பி வெங்கடாசலம், மாவட்ட பொறுப்பாளா்கள் ரோபோ ரவிசந்திரன், சுகுமாா், தேவராஜ், ஒன்றிய பொறுப்பாளா் சிவலிங்கம் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், அத்திக்கடவு போராட்டக் குழுவினா், களஞ்சியம் விவசாயிகள் சங்கம், கிராமிய மக்கள் இயக்கம், நாம் தமிழா் கட்சி, தமிழக விவசாய பாதுகாப்புச் சங்கம், கொங்கு இளைஞா் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா், கட்சியினா் மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.