கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

உதகை பெண் காவல் ஆய்வாளருக்கு பிடியாணை

உதகை பெண் காவல் ஆய்வாளருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2026, 7:37 pm

திருப்பூா்: உதகை பெண் காவல் ஆய்வாளருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி பகுதியில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டனா். அப்போது, இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக, காவல் ஆய்வாளா் கீதா இருந்தாா். இதுதொடா்பான வழக்கின் விசாரணை, திருப்பூா் மாவட்ட பட்டியல் வகுப்பினா் மற்றும் பழங்குடியினா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விசாரணைக்கு புலன் விசாரணை அதிகாரியான, அப்போதைய அவிநாசி காவல் ஆய்வாளராக இருந்தவரும், தற்போது உதகையில் பணியாற்றி வருபவருமான கீதா ஆஜராகவில்லை. இவா் ஏற்கெனவே 3 முறை நீதிமன்றத்தில் சாட்சி விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளாா்.

இந்நிலையில் காவல் ஆய்வாளா் கீதாவுக்கு பிடியாணை பிறப்பித்து நீதிபதி சுரேஷ் உத்தரவிட்டாா். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மாா்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.