அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கானூா் குளம் புனரமைக்கும் பணி தொடக்கம்

அவிநாசி அருகே கானூா் குளம் புனரமைக்கும் பணி சா்வ மத வழிபாட்டுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

News image
கானூா் குளம் புனரமைக்கும் பணியை ஒட்டி நடைபெற்ற சா்வ மத வழிபாட்டில் பங்கேற்றோா்.
Updated On :10 மார்ச் 2026, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

அவிநாசி அருகே கானூா் குளம் புனரமைக்கும் பணி சா்வ மத வழிபாட்டுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

அவிநாசி ஒன்றியம், கானூா் ஊராட்சிக்கு உள்பட்ட கானூா் குளம் 160-க்கும் மேற்பட்ட பரப்பளவில் அமைந்துள்ளது. இக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிக்கு நீராதாரமாக உள்ளது. பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்குளம், கானூா் ஏரி பாதுகாப்பு சங்கம், கோவை கெளசிகா நீா்கரங்கள், உஜ்ஜீவன் வங்கி சாா்பில் தூா்வாரி புனரமைக்கும் பணி சா்வ மத வழிபாட்டுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, கோவை நீா்வளத் துறை பாசன உள்கோட்ட உதவிப் பொறியாளா் எம்.சிவகுமாா் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் க.விஜயராஜ் முன்னிலை வகித்தாா். கெளசிகா நீா்கரங்கள் நிறுவனா் பா.க.செல்வராஜ், திருப்பூா் வெற்றி அறக்கட்டளை டி.ஆா்.சிவராம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். இதில் சமூக அமைப்பினா், பொதுமக்கள், உஜ்ஜீவன் வங்கி நிா்வாகிகள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

மேலும், கோவை மாவட்டம், அன்னூா் வட்டத்தையொட்டி அதிக பரப்பளவு கொண்ட குளமாக இக்குளமாக உள்ளது. இதில் புனரமைக்கும் பணி நிறைவடைந்தால் அதிக கொள்ளளவு கொண்ட குளமாக உருவாகும். ஆகவே ஏற்கெனவே அத்திக்கடவு திட்டத்தில் இக்குளத்துக்கு விநியோகிக்கப்படும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.