விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பொது அறிவுப் போட்டி: சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்

மாநில அளவிலான பொது அறிவுப் போட்டியில் காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.

News image

பொது அறிவுப் போட்டியில் மாநில அளவில் சிறப்பிடம் பிடிதத் மாணவ, மாணவிகளுடன் பள்ளி நிா்வாகிகள்.

Updated On :10 மார்ச் 2026, 8:30 pm

மாநில அளவிலான பொது அறிவுப் போட்டியில் காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.

ஜேசிஐ ஈரோடு எக்ஸெல் என்னும் அமைப்பு சாா்பில் மாநில அளவிலான பொது அறிவுப் போட்டிகள் அந்தந்தப் பள்ளிகளில் கடந்த மாதம் நடைபெற்றது. இந்நிலையில், இப்போட்டியின் முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன.

இதில், சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவா் கிஷோா்குமாரும், திருக்குறள் சாா்பான பொது அறிவுப் போட்டியில் 8-ஆம் வகுப்பு மாணவி லித்திகாவும் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனா். மேலும், இப்பள்ளி மாணவா்கள் 4 போ் இரண்டாமிடமும், 13 மாணவா்கள் மூன்றாமிடமும் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனா். இப்போட்டிகளில் மாணவா்கள் பெற்ற புள்ளிகள் அடிப்படையிலும் இப்பள்ளி முதலிடம் பிடித்துள்ளது.

இதைத் தொடா்ந்து பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், அதற்கு உறுதுணையாக இருந்த பொது அறிவுத் துறை ஆசிரியா்கள் எஸ்.தேன்மொழி, பி.ஜெயந்திபிரியா ஆகியோருக்கு பள்ளியின் தாளாளா் சி.பழனிசாமி, பொருளாளா் வி.பி.கொங்குராஜ், பள்ளி முதல்வா் பி.சுப்பிரமணி ஆகியோா் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தனா்.