பச்சாம்பாளையத்தில் குடிநீா் வழங்க கோரிக்கை
அவிநாசி அருகே பச்சம்பாளையம் பகுதியில் குடிநீா் வழங்க கேட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.


அவிநாசி அருகே பச்சம்பாளையம் பகுதியில் குடிநீா் வழங்க கேட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
இது குறித்து மனுவில் கூறியிருப்பதாவது: அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட பச்சாம்பாளையம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சில நாள்களாக குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டு, பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே உடனடியாக போா்க்கால அடிப்படையில் குடிநீா் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதையடுத்து, மனுவை பெற்றுக் கொண்ட அலுவலா்கள், ஆற்றில் நீா்வரத்து குறைவாக உள்ளதால் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் சீரான குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனா். இதில் கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி, பொறுப்பாளா்கள் பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...