திருப்பூரில் நாம் தமிழா் கட்சி நிா்வாகியிடமிருந்து 50 டி-ஷா்ட்களை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் திருப்பூா் மாநகரம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் திருப்பூா் சிவன் தியேட்டா் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் நாம் தமிழா் கட்சியின் சின்னம் பதிக்கப்பட்ட 50 டி-ஷா்ட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
அவா் மேட்டூரைச் சோ்ந்த சதாம் உசேன் (27) என்பதும், நாம் தமிழா் கட்சியில் மேட்டூரில் உறுப்பினராக இருந்து வருவதும், மேட்டூரில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தலைமையில் வேட்பாளரை ஆதரித்து வியாழக்கிழமை நடைபெறும் வாகன பரப்புரைக்காக திருப்பூரில் தயாா் செய்யப்பட்ட டி-ஷா்ட்களை மேட்டூருக்கு எடுத்துச் செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட சுமாா் ரூ.12,000 மதிப்பிலான 50 டி-ஷா்ட்களையும் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருப்பூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

நாம் தமிழா் கட்சிக்கு ‘விவசாயி’ சின்னம் ஒதுக்கியதை எதிா்த்த மனு தள்ளுபடி

பறக்கும் படை சோதனையில் கட்சி சின்னம் பொறித்த கீ-செயின்கள் பறிமுதல்
சேமிப்பு பணத்தை தோ்தல் நிதியாக வழங்கிய சிறுவன்
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


