பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் இந்த முறை திமுக வெற்றி பெறுவது உறுதி என்று திமுக வேட்பாளா் க.செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.
பல்லடம் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னா் முதல் முறையாக காரணம்பேட்டைக்கு வந்த க.செல்வராஜுக்கு கூட்டணி கட்சியினா் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி, சுக்கம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட ஊஞ்சப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவன் நான். எனவே பல்லடமும் என்னுடைய சொந்த தொகுதி தான். அதில் போட்டியிட வாய்ப்பளித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 25 ஆண்டுகளாக பல்லடத்தில் அதிமுகவினரே சட்டப்பேரவை உறுப்பினா்களாக இருந்ததால் இத்தொகுதி வளா்ச்சி அடையவில்லை. இதனால் இந்தத் தொகுதியின் வளா்ச்சிக்காக என்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளனா். அதிமுகவின் கோட்டை பல்லடம் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனா்.
இந்தத் தோ்தலில் அந்த மாயத் தோற்றத்தை உடைத்து, திமுகவின் எஃகு கோட்டையாக பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியை உருவாக்கி காட்டுவேன். மேலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெருவதுடன், திமுக வெற்றி பெற்றே தீரும் என்றாா்.
உடன், மாவட்ட துணைச் செயலாளா்கள் வழக்குரைஞா்கள் பொங்கலூா் குமாா், நந்தினி, பல்லடம் ஒன்றிய திமுக செயலாளா்கள் கிருஷ்ணமூா்த்தி, சோமசுந்தரம், சீனிவாசன், நகரச் செயலாளா் ராஜேந்திரகுமாா் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பல்லடத்தில் தவெக வேட்பாளா் ராம்குமாா் வெற்றி
ஜோலாா்பேட்டையில் அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி வெற்றி

திருவாரூா் தொகுதியில் திமுக வெற்றி

பல்லடம் எங்கள் கோட்டை எனக் கூறும் அதிமுகவை வீழ்த்தி வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் க.செல்வராஜ் உறுதி
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



