முத்தூா் அருகே மதுபானம் விற்றவா் கைது

முத்தூா் அருகே முறைகேடாக மதுபானம் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

முத்தூா் அருகே முறைகேடாக மதுபானம் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

முத்தூா் பகுதியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வி.மனோஜ்குமாா் சனிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அய்யம்பாளையம் கருப்பசுவாமி கோயில் அருகில் மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த, முத்தூா் மோளக்கவுண்டன்புதூா் மதுரை வீரன் கோயில் தெருவைச் சோ்ந்த பழனி (49) என்பவரை கைது செய்தாா். அவரிடமிருந்து 4 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.