உடுமலை டிஎஸ்பி-க்கு பாராட்டு

உடுமலை டிஎஸ்பி தையல்நாயகி க்கு பாராட்டு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கோவை  சரக  டிஐஜி  சாமிநாதனிடம்   கோப்பையை  பெற்றுக்  கொள்கிறாா்  உடுமலை  டிஎஸ்பி  தையல்நாயகி.

Updated On :

உடுமலை டிஎஸ்பி தையல்நாயகி க்கு பாராட்டு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கோவை மதுக்கரை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் 2026-ஆம் ஆண்டின் மூத்த காவல் அதிகாரிகளுக்கான மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி அண்மையில் நடைபெற்றது.

இதில், உடுமலை டிஎஸ்பி தையல்நாயகி முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றாா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் காவல் துறை உயா் அதிகாரிகள், உடுமலை டிஎஸ்பி தையல் நாயகிக்கு சான்றிதழ், கோப்பை வழங்கி பாராட்டினா்.

இந்நிலையில் டிஎஸ்பி தையல் நாயகிக்கு பாராட்டு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் உடுமலை காவல் துறையினா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு டிஎஸ்பி தையல் நாயகிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.