தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம்
திருப்பூரில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது.

பயிலரங்கில் பங்கேற்றவருக்கு சான்றிதழ் வழங்கிய ஆட்சியா் சி.முத்துக்குமரன்.
திருப்பூரில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது.
அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற துணை புரியும் வகையில் அனைத்துத் துறை அலுவலா் மற்றும் பணியாளா்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, திருப்பூா் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலா் மற்றும் பணியாளா்களுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.
இதில், பங்கேற்றவா்களுக்கு ஆட்சிமொழி வரலாறு , சட்டம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், ஆட்சிமொழி செயலாக்கம், அரசாணைகள், மொழிப்பயிற்சி ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
புதன்கிழமை நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் பங்கேற்று, பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்ற 87 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் ஜோதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புனிதா அந்தோணியம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

