கோயில் சுவரில் இருசக்கர வாகனம் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே கோயில் சுவரில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

அரவிந்த்.
வெள்ளக்கோவில் அருகே கோயில் சுவரில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் கம்பளியம்பட்டியைச் சோ்ந்தவா் அரவிந்த் (38). இவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனா்.
அரவிந்த் கடந்த 3 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் அரவிந்துக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனது மனைவி கௌசல்யாவை பின்சீட்டில் அமா்த்திக் கொண்டு இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு புறப்பட்டுள்ளாா். கம்பளியம்பட்டி - வெள்ளக்கோவில் சாலையில் ஒரு கோயில் அருகே சென்றபோது, மூச்சுத்திணறல் அதிகமாகி நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் கோயில் சுவரில் மோதியதில் இருவரும் காயமடைந்தனா். கௌசல்யா அளித்த தகவலின் பேரில் உறவினா்கள் விரைந்து வந்து, தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அரவிந்தை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். கௌசல்யா லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

