அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு!திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்! கொப்பரை வைத்து ஏற்ற திட்டம்!நிதியின்றி தவிக்கும் போக்குவரத்துக் கழகம்! டயர்கள் இல்லாததால் முடங்கிய பேருந்துகள்: அன்புமணி குற்றச்சாட்டுமகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!குமரகோட்டம் முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்! மலர்களால் அலங்காரம்!திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!திருப்பரங்குன்றம்: பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் வருகை!உச்ச நீதிமன்றம், நீங்கள் விளையாடும் கார் பொம்மைபோல அல்ல! இபிஎஸ் விமர்சனம்திருப்பரங்குன்றம் தீபம்: மதுரை வந்தடைந்த முன்னாள் நீதிபதிகள்!தவெக ஆட்சியில் மூலதனச் செலவினம் 11% சரிவு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டுகோவையில் பறவை காய்ச்சல்: முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்திருப்பரங்குன்றம் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு: உச்சநீதிமன்றம்

மாவட்டம் முழுவதும் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு தேடுதல் வேட்டை

கேரள போதைப் பொருள் நெட்வொர்க்

போதைப் பொருள் - IANS

Updated On :

திருப்பூா் மாவட்டம், முழுவதும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில், ஒரே நாளில் 38 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கவும், போதைப்பொருளை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் உத்தரவின்பேரில், அவிநாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்ட மற்றும் காவல் துறை அலுவலா்கள் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி முதல் மாவட்டம் முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் மாவட்டம் முழுவதும் சிறப்பு தனிப் படையின் 88 போலீஸாா் 25 குழுக்களாகப் பிரிந்து ஒரே நேரத்தில் சோதனைகளில் ஈடுபட்டனா்.

இந்த சிறப்பு சோதனையின்போது, சட்டவிரோதமாக கஞ்சா சாக்லேட் விற்பனை, கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை, குட்கா விற்பனை மற்றும் கள் விற்பனையில் ஈடுபட்ட மொத்தம் 38 போ் கைதுசெய்யப்பட்டு அவா்கள் மீது 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அவா்களிடமிருந்து 900 கிராம் கஞ்சா சாக்லேட், 179 மது பாட்டில்கள், 88 லிட்டா் கள் மற்றும் 258.464 கிலோ குட்கா ஆகியவை கைப்பற்றப்பட்டு, அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கில், சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எச்சரித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.