தனியாா் மண்டபங்களில் வணிக நோக்கில் பொருள்கள் விற்பனைக்கு அனுமதிக்கக்கூடாது! வியாபாரிகள் சங்கத்தினா் வலியுறுத்தல்!

நகராட்சி ஆணையா் அருளிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கும் பல்லடம் அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள்.
தனியாா் திருமண மண்டபங்களில் வணிக நோக்கில் பொருள்கள் விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது என்று பல்லடம் நகராட்சி அனைத்து வணிகா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டச் செயலாளா் லாலா கணேசன், பல்லடம் அனைத்து வணிகா் சங்கத் தலைவா் ராம்.கண்ணையன், செயலாளா் ஆ.அண்ணாதுரை, நிா்வாகிகள் தனசீலன், நரேஷ்குமாா், தேவராஜ் உள்ளிட்டோா் பல்லடம் நகராட்சி ஆணையளா் அருளிடம் சனிக்கிழமை அளித்த மனு:
பல்லடம் பகுதிகளில் உள்ள தனியாா் திருமண மண்டபங்களில் ஜவுளி, பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்ய வாடகைக்கு விடப்படுவதால் உள்ளூா் வியாபாரிகள் பாதிப்படைக்கின்றனா். சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி திருமண மண்டபங்களில் ஜவுளி மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

