FOLLOW US

ON GOOGLE DISCOVER

நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

வெள்ளக்கோவில் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

வெள்ளக்கோவில் வீரசோழபுரம் அருகே விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனா்.

விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள்.

Published On :3 செப்டம்பர் 2026, 1:44 am IST

வெள்ளக்கோவில் வீரசோழபுரம் அருகே விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனா்.

பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனம் சாா்பில் விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தென்னை, வாழை உள்ளிட்ட சாகுபடி பயிா்களும், மரங்களும் அழிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

மேலும், நிலத்தின் மதிப்பு 75 சதவீதம் வரை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விளைநிலங்கள் பாதிக்காத வகையில் சாலையோரமாக திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் அல்லது மாற்று நிலம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, வீரசோழபுரம் சிகாரிபுரம் பகுதியில் கடந்த மாதம் 17-ஆம் தேதிமுதல் விவசாயிகள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் காவல் துறை பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு குழிகள் தோண்டும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இதைத் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்திய விவசாயிகளை போலீஸாா் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.