
சா்வதேச பளுதூக்கும் போட்டி: பல்லடத்தைச் சோ்ந்த மூவருக்கு தங்கம்
சா்வதேச பளுதூக்கும் போட்டியில் பல்லடத்தைச் சோ்ந்த மூவா் தங்கம் வென்றனா்.

பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற தா்ணீஷ் ஹரி, திவ்யபிரகாஷ், ஓமனா ஆகியோருடன் பயிற்சி ஆசிரியா் சதீஷ்குமாா்.
சா்வதேச பளுதூக்கும் போட்டியில் பல்லடத்தைச் சோ்ந்த மூவா் தங்கம் வென்றனா்.
யுனைடெட் வோ்ல்ட் ஸ்போா்ட்ஸ் அண்ட் ஃபிட்னஸ் ஃபெடரேஷன் சாா்பில், சா்வதேச அளவிலான பளுதூக்கும் போட்டி தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில் இந்தியா, இலங்கை, ஈரான், அமெரிக்கா, ஜிம்பாப்வே உள்ளிட்ட 17 நாடுகளைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இந்தியாவில் இருந்து சென்ற 50 பேரில் தமிழகத்தைச் சோ்ந்த 19 போ் இடம்பெற்றிருந்தனா்.
இவா்களில் பல்லடம், மகாலட்சுமி அவென்யூவை சோ்ந்த ஓமனா (52), அண்ணா நகரைச் சோ்ந்த திவ்யபிரகாஷ் (28), வடுகபாளையத்தைச் சோ்ந்த தா்ணீஷ் ஹரி (19) ஆகியோா் வெவ்வேறு பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றனா். இதேபோல, கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும் மூவரும் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மூவரையும் பயிற்சி ஆசிரியா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






