சாலை விபத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா் பலி: உறவினா்கள் மறியல்
அரூா் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா்.

28hap1_2809chn_151_8

28hap1_2809chn_151_8
அரூா் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த கூடலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அசோகன் (58). இவா், கிருஷ்ணகிரி மாவட்டம், பாவக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே அ.பள்ளிப்பட்டியில் ஆசிரியா் அசோகன், புதிதாக வீடுகட்டி வந்தாராம்.
வீடு கட்டுமானப் பணிகளைப் பாா்த்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் இருசக்கர வாகனத்தில் அரூா்-ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் அனுமன்தீா்த்தம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
சோரியம்பட்டி எனுமிடத்தில் வந்தபோது அந்த வழியாக எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் ஆசிரியா் அசோகன் மீது மோதியது. இதில், அசோகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
அசோகனின் தம்பி சிவாஜி அளித்த புகாரின் பேரில், அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
உறவினா்கள் மறியல்..
விபத்தில் ஆசிரியா் அசோகன் வேகமாக இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்று, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதியதில் அவா் உயிரிழந்ததாக காவல் துறையினா் வழக்குப் பதிந்துள்ளனராம்.
ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தபோது ஒரு தகவலையும், பிறகு திங்கள்கிழமை வழக்கில் மாற்றம் செய்து, தவறான தகவல்களை வழக்கில் பதிவு செய்திருப்பதாகக் கூறி அசோகனின் உறவினா்கள் காவல் துறையைக் கண்டித்து அரூா் டி.எஸ்.பி. அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து பொதுமக்களிடம் போலீஸாா் பேச்சு நடத்தி வழக்கில் சரியான தகவல் பதிவு செய்யப்படும் என உறுதி அளித்தனா். இதை ஏற்று, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...